Sunday, December 2, 2007

Sunday, July 29, 2007

எம்.ஜி.ஆர். நடித்த காவியங்கள்

136 படங்கள் அவர் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி வெளியான ஆண்டு 1947, அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





எண், வருடம், படம் பெயர், நாட்கள் என வாசிக்கவும்
1. 1947 ராஜகுமாரி 168 நாட்கள்
2. 1948 மோகினி 133 நாட்கள்
3. 1950 மருதநாட்டு இளவரசி 133 நாட்கள்
4. 1950 மந்திரிகுமாரி 151 நாட்கள்
5. 1951 மர்ம யோகி 151 நாட்கள்
6. 1951 சர்வாதிகாரி 142 நாட்கள்
7. 1952 அந்தமான் கைதி 133 நாட்கள்
8. 1952 குமாரி 112 நாட்கள்
9. 1952 என் தங்கை 352 நாட்கள்
10. 1953 நாம் 84 நாட்கள்



11. 1953 பணக்காரி 70 நாட்கள்
12. 1953 ஜெனோவா 133 நாட்கள்
13. 1954 மலைக்கள்ளன் 150 நாட்கள்
14. 1954 கூண்டுக்கிளி 77 நாட்கள்
15. 1955 குலேபகாவலி 166 நாட்கள்
16. 1956 அலிபாபாவும் 40 திருடர்களும் 168 நாட்கள்
17. 1956 மதுரை வீரன் 180 நாட்கள்
18. 1956 தாய்க்குப் பின் தாரம் 161 நாட்கள்
19. 1957 சக்கரவர்த்தி திருமகள் 140 நாட்கள்
20. 1957 ராஜராஜன் 77 நாட்கள்



21. 1957 புதுமைப்பித்தன் 112 நாட்கள்
22. 1957 மகாதேவி 117 நாட்கள்
23. 1958 நாடோடி மன்னன் 200 நாட்கள்
24. 1959 தாய்மகளுக்கு கட்டிய தாலி 86 நாட்கள்
25. 1960 பாக்தாத் திருடன் 112 நாட்கள்
26. 1960 ராஜாதேசிங்கு 77 நாட்கள்
27. 1960 மன்னாதி மன்னன் 93 நாட்கள்
28. 1961 அரசிளங்குமரி 92 நாட்கள்
29. 1961 திருடாதே 161 நாட்கள்
30. 1961 நல்லவன் வாழ்வான் 84 நாட்கள்
31. 1961 சபாஷ் மாப்பிளே 70 நாட்கள்
32. 1961 தாய் சொல்லைத் தட்டாதே 133 நாட்கள்
33. 1962 ராணி சம்யுக்தா 70 நாட்கள்
34. 1962 மாடப்புறா 77 நாட்கள்
35. 1962 தாயைக் காத்த தனையன் 140 நாட்கள்



36. 1962 குடும்பத்தலைவன் 108 நாட்கள்
37. 1962 பாசம் 84 நாட்கள்
38. 1962 விக்கிரமாதித்தன் 79 நாட்கள்
39. 1963 பணத்தோட்டம் 84 நாட்கள்
40. 1963 கொடுத்து வைத்தவள் 91 நாட்கள்
41. 1963 தர்மம் தலைக்காக்கும் 117 நாட்கள்

Tuesday, June 12, 2007

ஆயிரத்தில் ஒருவனின்' அட்டகாசம்

மையம் முலமாக கிடைத்த தகவல்
சொடுக்கவும் http://tamil.cinesouth.com/masala/hotnews/new/04062007-3.shtml

Sunday, June 3, 2007

ஆயிரத்தில் ஒருவன்

தினமலர் 3.6.2007

எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இத்திரைப் படம் நேற்று மூன்று தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்னை ஆபிராமி தியேட்டரில் இப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இப்படத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் இப்படத்தை காண வந்திருந்தனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே டிஜிட்டல் பேனர்களையும் வைத்திருந்தனர்.



இப்படத்தை காண வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த என்.சந்திரபாபு என்பவர் கூறுகையில், கடந்த 1966 ஆம் ஆண்டு மேகலா தியேட்டரில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 முறைக்கும் மேல் இப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அலுக்கவே இல்லை. இத்தியேட்டரில் இருந்து இப்படத்தை மாற்றுவதற்குள் 10 முறையாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

தாமஸ் மலையை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கூறுகையில் 'என்னிடம் இப்படத்தின் சிடி இருக்கிறது. இருந்தாலும் மற்ற ரசிகர்களோடு தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் போது ஆர்வம் அதிகரிக்கிறது' என்றார்.

இது குறித்து மேலும் சிலரிடம் கேட்டபோது படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல" என்னும் பாடலை கேட்கும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடப்பட்ட பாடல்களை கேட்கும் உணர்வு வெளிப்படுகிறது என தெரிவித்தனர்.

Friday, April 6, 2007

நா.காமராசன் அவர்களுக்கு

சமீபத்தில் திரு.நா.காமராசன் அவர்கள் குமுதம் இதழில் எம்.ஜி.ஆர். பற்றி குறிப்பிடும் போது பாடலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் ஒரு கிங் என்று கருணாநிதி அவர்கள் சொன்னதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த தனக்கு எம்.ஜி.ஆர். தீவிர அரசியல் ஈடுபாடு ஏற்பட்ட பின் வேண்டாத குணங்கள் அவரிடம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த குணங்கள் என்ன என்பதை சொல்லவில்லை. எனக்கு இதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
(1) புகழ் வேண்டாத குணம்
(2) பணம் வேண்டாத குணம்
(3) பதவி வேண்டாத குணம்

என்று சொல்லி இருக்கலாம், முகவரி தந்தவரை முகஸ்துதி செய்ய சொல்லவில்லை நன்றி மறக்காமல் இருந்திருக்கலாம்.

Sunday, March 25, 2007

திருச்சி நகரில் எம்.ஜி.ஆர் காவியங்கள்

100 நாட்களுக்கு மேல்

1) எங்க வீட்டுப் பிள்ளை - 236 நாட்கள்
2) உலகம் சுற்றும் வாலிபன் - 203 நாட்கள்
3) என் தங்கை - 181 நாட்கள்
4) மதுரை வீரன் - 169 நாட்கள்
5) குலேபகாவலி - 166 நாட்கள்
6) அலிபாபாவும் 40 திருடர்களும் - 160 நாட்கள்
7) ராஜகுமாரி - 160 நாட்கள்
8) நாடோடி மன்னன் - 161 நாட்கள்
9) மாட்டுக்கார வேலன் - 156 நாட்கள்
10)மர்ம யோகி - 151 நாட்கள்
11)மலைக்கள்ளன் - 147 நாட்கள்
12)தாய்க்குபின் தாரம் - 147 நாட்கள்
13)மந்திரிகுமாரி - 146 நாட்கள்
14)சர்வாதிகாரி - 141 நாட்கள்
15)சக்கரவர்த்தி திருமகள் - 140 நாட்கள்


16)திருடாதே - 140 நாட்கள்
17)தாயை காத்த தனயன் - 140 நாட்கள்
18)தாய் சொல்லைத்தட்டாதே - 133 நாட்கள்
19)அந்தமான் கைதி - 133 நாட்கள்
20)அடிமைப் பெண் - 133 நாட்கள்
21)ரிக் ஷாக்காரன் - 138 நாட்கள்
22)மோகினி - 133 நாட்கள்
23)மருதநாட்டு இளவரசி - 133 நாட்கள்
24)குமாரி - 112 நாட்கள்
25)ஜெனோவா - 112 நாட்கள்
26)பணக்கார குடும்பம் - 112 நாட்கள்
27)நம்நாடு - 112 நாட்கள்
28)எங்கள் தங்கம் - 112 நாட்கள்
29)அன்பேவா - 112 நாட்கள்
30)காவல்காரன் - 126 நாட்கள்
31)குடியிருந்த கோயில் - 112 நாட்கள்
32)ஒளிவிளக்கு - 108 நாட்கள்
33)ரகசிய போலீஸ் 115 - 105 நாட்கள்



34)தெய்வத்தாய் - 105 நாட்கள்
35)என் அண்ணன் - 112 நாட்கள்
36)குமரிக்கோட்டம் - 107 நாட்கள்
37)நல்ல நேரம் - 112 நாட்கள்
38)இதயவீணை - 112 நாட்கள்
39)உரிமைக்குரல் - 115 நாட்கள்
40)இதயக்கனி - 116 நாட்கள்
41)பல்லாண்டு வாழ்க - 112 நாட்கள்
42)நீதிக்கு தலைவணங்கு - 112 நாட்கள்
43)தேடி வந்த மாப்பிள்ளை - 105 நாட்கள்
44)மகாதேவி - 105 நாட்கள்
45)புதுமைப்பித்தன் - 101 நாட்கள்

மக்கள் திலகம் சிறப்பு மலரில் இருந்து எடுத்தது

Monday, March 19, 2007

நாடோடி மன்னன் சாதனைகள்

(நாடோடி மன்னன் ஸ்பேஷல் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து)

ஜனசக்தி - மார்ச் 1964

1958-ல் புரட்சி நடிகரின் தயாரிப்பில் உருவான - நாடோடி மன்னன் வெளியிடப்பட்ட நாள் முதல் இன்று வரை (1964) எந்த நடிகரின் படமும் வந்து
முறியடிக்காமேலே இருக்கிறது. அது மட்டுமல்ல வெளியான நாள் முதல் இன்று வரை (6 ஆண்டுகள்) தமிழகத்தில் இத்திரைக் காவியம் ஓடிக்கொண்டே வருகிறது சமீபத்தில் இலங்கையில் கூட மிக பிரமாதமான வசூலை ஏற்படுத்தி உள்ளது. நாடோடி மன்னன் - மதுரை வீரனை வென்று சாதனை படைத்தது. அது போல நாடோடி மன்னனை வெல்ல எம்.ஜி.ஆர். நடித்த படம். அல்லது இனி அவர் தயாரிக்கும் படம் வந்தால் முறியடிக்கலாம்.

(நாடோடி மன்னன் படத்தின் சாதனையை 1965ல் வெளியான எங்க வீட்டுப்பிள்ளை முறியடித்தது, எம்.ஜி.ஆர் படத்தின் வசூலை இன்னொரு எம்.ஜி.ஆர் படம் மட்டுமே முறியடிக்கும் என்பது எத்தனை உண்மை)
நாடோடி மன்னன் படம் 1958ல் தீபாவளி அன்று சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ரீலீஸானது, அந்நாட்டின் வினியோகஸ்தாரான ஷா பிரதர்ஸ் நிறுவனம் நாடோடி மன்னன் சிறப்பு மலரை மிக பிரமாண்டமாக வெளியிட்டது.

நாடோடி மன்னன் படம் வெளியான திரையரங்குகள் (22.8.1958)

சென்னை பாரகன் 161 நாள்
ஸ்ரீகிருஷ்ணா 161 நாள்
உமா 147 நாள்
சேலம் சித்தேஸ்வரா 180 நாள்
கோவை ராஜா 161 நாள்
திருச்சி ராக்ஸி 161 நாள்
மதுரை தங்கம் 140 நாள்
ஈரோடு கிருஷ்ணா 133 நாள்
தஞ்சை யாகப்பா 127 நாள்
நெல்லை பாப்புலர் 120 நாள்
திருவண்ணாமலை கிருஷ்ணா 133 நாள்
நாகர் கோவில் பயோனியர்முத்து 105 நாள்
வேலூர் தாஜ் 104 நாள்
கரூர் அம்பிகை 102 நாள்
கடலூர் பிரமிளா 100 நாள்
திண்டுக்கல் சென்ட்ரல் 105 நாள்
சித்தூர் பிரமிளா 100 நாள்

பெங்களூர் அபேரா 84 நாள்
பெங்களூர் சிவாஜி 84 நாள்
பெங்களூர் நவரங் 56 நாள்
கேரளா
திருவனந்தபுரம் சித்ரா 98 நாள்

வெளி நாடு
இலங்கை கிங்ஸிலி 106 நாள்
இலங்கை ராஜா 107 நாள்
இலங்கை கெயிட்டி 106 நாள்
இலங்கை சென்ட்ரல் 106 நாள்
இலங்கை பிளாசா 112 நாள்
இலங்கை நவாஸ் 101 நாள்
சிங்ப்பூர் ராயல் 50 நாள்
கோலாலம்பூர் லிடோ 50 நாள்
சென்ட்ரல் 50 நாள்
ஈப்போ கிராண்ட் 50 நாள்
சன் 50 நாள்
பினாங்கு ராயல் 50 நாள்
தைப்பிங் லிடோ 50 நாள்
ரெக்ஸ் 50 நாள்

For further reference of story click the links
1) http://mgrroop.blogspot.com/2006/08/emperor-of-tamil-cinema-strikes-back.html
2) http://mgrroop.blogspot.com/2006/08/re-release-and-reaction-part-i.html
3)http://mgrroop.blogspot.com/2006/08/emperor-of-tamil-cinema-part-ii.html
4)http://mgrroop.blogspot.com/2006/08/re-release-and-reaction-part-ii_18.html
5)http://mgrroop.blogspot.com/2006/09/re-release-and-reaction-part-iii.html
6)http://mgrroop.blogspot.com/2006/10/re-release-and-reaction-part-iv.html

Sunday, March 11, 2007

சாதனை துளிகள்

எம்.ஜி.ஆர் பாசறையை சேர்ந்தவர்கள் "மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம்" என்ற சிறப்பு மலர் 2001ல் வெளிவந்தது விலை ரூ.10/- அதில் உள்ள ஒரு சில முக்கியமான புள்ளி விவரங்கள்

1) திரையுலகில் புரட்சித் தலைவர் வலம் வந்த ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட உலகல் அதிக தொகை சம்பளம் வாங்கிய ஒரே திரையுலக திலகம் - படம் மீனவ நண்பன், வருடம் - 1977, தொகை 22 லட்சம்.

2) இரு வேட நடிப்பில் புரட்சி - இரட்டை வேட நடிப்பில் 19 திரைக்காவியங்களில் நடித்து புகழ்பெற்ற ஒரே உலக திரையுலக திலகம் - மக்கள் திலகமே!

3) ஒரு நடிகரின் மன்றத்தை பாரத பிரதமர் திறந்து வைத்து உலகில் நம் மக்கள் திலகதின் பெயரில் அமைந்த மன்றம் ஒன்று தான். இடம்: அந்தமான் தீவு - பாரத பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி (1963)
4) உலகில் புரட்சித் தலைவர் ஒருவர்க்குதான் திரைப்பட உலகில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் என்ற அமைப்பு உருவாகி, 85 நாடுகளில் மக்கள் திலகத்திற்கு மன்றங்கள் அமைக்கப்பட்டது.

5) சொந்த காவியங்கள் தயாரித்து 2 வேட நடிப்பை தாங்கி நடித்து, இயக்குனராக பணியாற்றி உலக திரைப்பட துறைக்கு சவால் விட்டு, சகாப்தம் படைத்த முப்பெரும் காவியங்கள் வெளிவந்து வெள்ளி விழா ஓடி சாதனை படைத்தது! வேறு எந்த நடிகர் தயாரித்த சொந்த படங்களும் மக்கள் திலகம் தயாரித்த காவியங்களுக்கு ஈடு இணையில்லை. (படங்கள் - நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்)

6) புரட்சித் தலைவர் அவர்கள் நடித்த வண்ண படங்கள் 42 இதில் 100 நாட்கள் ஒடி சாதனை பெற்ற காவியங்கள் 35.

Sunday, March 4, 2007

கோடியை பெற்ற படங்கள்


எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகும் வரை முதல் வெளியிட்டில் 1 கோடியை வசூலாக பெற்றுதந்த படங்கள் 11 அதில் 10 படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த படங்களே அவை வருமாறு
1) மதுரை வீரன் (1956)
2) நாடோடி மன்னன் (1958 - இரட்டை வேடம்)
3) எங்க வீட்டுப் பிள்ளை(1965 - இரட்டை வேடம்)
4) அடிமைப் பெண் (1969 - இரட்டை வேடம்)
5) மாட்டுக்கார வேலன்(1970 - இரட்டை வேடம்)

6) ரிக்க்ஷாக்காரன் (1971)
7) உலகம் சுற்றும் வாலிபன் (1973 - இரட்டை வேடம்)
8) உரிமைக் குரல்(1974)
9) இதயக்கனி(1975)
10) மீனவ நண்பன்(1977 -78)

Sunday, February 18, 2007

இப்படியும் சொன்னார்கள்



1977ல் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் திரு.கருணாநிதி அவர்கள் எம்.ஜி.ஆர். என்ற நடிகர் பற்றி இப்படி சொன்னார் - இரண்டு வரி வசனம் மனப்பாடம் செய்து பேச தெரியாது (ஆம் இரண்டு வரி தான் இரண்டு பக்கம் அல்ல) திரு.கருணாநிதி அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் வரை நடிகர் கட்சி என்றே குறிப்பிட்டு வந்தார்.





தமிழ்வாணன் எழுதிய பதில்கள்

1) எம்.ஜி.ஆரிடம் முதல் அமைச்சர் பொறுப்பை விட்டால்?

சர்க்கஸ் கம்பெனியை ஒரு மனித முதலாளி நடந்த்தாமல் சிங்கத்தின் பொறுப்பில் நடக்கவிட்டு, கூண்டைத் திறந்து வைத்திருந்தால் என்னென்ன விபரிதங்கள் நிகழுமோ அவ்வளவும் நிகழும்.


2) எம்.ஜி.ஆர். இந்த வயதில் கூடக் கதாநாயகனாக நிலைத்து நிற்பதிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னை பற்றிய எந்த உண்மையும் மக்களுக்கு தெரியாமல் வாழ்கிறவன், அவனை பற்றிய உண்மைகள் தெரியும் வரை அவன் செல்வாக்கோடு இருப்பான் என்று தத்துவ மேதை மான்ஸ்பீல்டு சொன்னது உண்மை என்று தெரிகிறது.

  • மேலும் அவர் சொன்ன சில முத்தான ரகசியங்கள்

    எம்.ஜி.ஆருக்கு கார் ஒட்ட தெரியாது. இங்க்லீஸ் பேச தெரியாது.

    எம்.ஜி.ஆர் ஒரு சர்வாதிகாரி அவர் இன்னொரு இடிஅமீன்.

    எம்.ஜி.ஆர் தனக்கு கைரேகை பார்க்க தெரியும் என்று ஏமாற்றி வருகிறார்.

    அரசியலில் காமெடி செய்பவர் எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர். ஜப்பானில் படப்பிடிப்புக்காக போயிருந்த போது தன்னை பற்றி ஜப்பானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சுய விளம்பரம் பிட் நோட்டீஸ் அடித்தார் இந்த துண்டு விளம்பரங்களை ஆங்கில மொழியிலும் ஜப்பான் மொழியிலும் அச்சிட்டுக் கொண்டார் எந்த ஏந்த நாட்டுக்கு படப்பிடிப்புக்காக பேகிறாரோ அங்கெல்லாம் இந்த பிட் நோட்டீஸ்களை விட்டார் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு நடிகரும் வாத்தியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா பப்ளிஸிட்டி.

(1970ல் எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்க ஜப்பான் சென்றார் அங்கே அவருக்கும் தமிழ்வாணன் அவர்களுக்கும் வாய் தகராறு நடந்தாக சொல்லி இப்படி எழுதியிருந்தார் - படிப்பதற்கு முன்பாக வடிவேல் பேசும் வசனமாக நினைத்து படியுங்கள்)

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஜப்பானில் சொற்போர் நடந்தது. எம்.ஜி.ஆர். சினந்து கொண்டே பேசினார் நான் சிரித்து கொண்டே பேசினேன். இதற்கு 40 தமிழர்கள் சாட்சி. இந்த போர் பற்றி நானாக எதுவும் எழுதப்போவதில்லை. எம்.ஜி.ஆர். எழுதினால் தான் நான் எழுதுவேன் காரணம் இந்த போர் எனக்கும் எம்.ஜி.ஆருக்கு மட்டும் உள்ள போர் அல்ல. ஒரு பெருங் கூட்டத்திற்க்கும் இன்னோரு பெருங் கூட்டத்திற்க்கும் நடக்க இருக்கிற போர்.


அடுத்த பதிவு அ.இ.அ.தி.மு.க.வின் 5ம் ஆண்டின் தொடக்க நிகழ்ச்சிகளின் தமிழ்வாணன் கூற்றுகள்

Sunday, February 11, 2007

பொய்யான தீர்க்கதரிசனங்கள்




எம்.ஜி.ஆர் ஒரு நடிகராக இருந்து முதல் அமைச்சராக இருந்த வரை உங்களுக்கு தெரியும் - ஆனால் 1972ல் இருந்து 1977 வரை அவரை பற்றி Master of all Subjects என்று பெயர் பெற்ற தமிழ்வாணன் அவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி எழுதிய கவர் ஸ்டோரி இங்கு தருகிறேன். இப் பதிவு படித்து
நீங்கள் சிரித்தாலும், தமிழ்வாணன் அவர்களை தவறாக நினைத்தாலும் அதற்கு நான் பொறுப்பல்ல. 2 பக்கம் வருவதை சுருக்கி தந்திருக்கிறேன் -


தயாரா - படியுங்கள்.

கல்கண்டு இதழ் - மே மாதம் 1977 - தலையங்கம் (எம்.ஜி.ஆரின் எதிர்காலம்)



தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சியை அடியோடு ஒழித்துக்கட்டுவது என்று சபதம் எடுத்த இராஜாஜி 1967 ஆம் ஆண்டு அந்த சபதத்தை முழூமையாக நிறைவேற்றிக் காட்டினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அன்று கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி இன்று வரை தலை தூக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியை எப்படியும் வேரறுத்துக் காட்டுவேன் என்று சபதம் எடுத்த எம்.ஜி.ஆர். இந்த சபதத்தை 1976 ஜனவரி கடைசியில் நிறைவேற்றிக் காட்டினார். தி.மு.க. மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதனுடைய சவப் பெட்டிக்கு ஆணி அடித்தற்ப்போல் சமீபத்திலே நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தல்.

இராஜாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே சாணக்கியனைப் போல் தங்கள் சபதத்தை செவ்வையாக நிறைவேற்றினார்கள். என்றாலும், பின் விளைவுகளைப் பார்க்கும் போது இராஜாஜி சபதத்தை விட எம்.ஜி.ஆர். சபதம் சிறப்பானது என்பது என் கருதது. இதை யவராலும் மறுக்க முடியாது. ஏன் என்றால் தனது சபதம் நிறைவேறியதை இராஜாஜியே பிற்காலத்தில் மனம் வருந்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி வருந்தவில்லை............ இராஜாஜி தனது தவறுக்காக 1971 தேர்தலுக்காக பெருந்தலைவர் காமராஜ்வுடன் சேர்ந்த்து பகீரதப் பிரயத்தனம் செய்ததார்கள் ஆனால் இருவராலும் தி.மு.கவை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை. அவர்களின் முயற்ச்சிக்கு தமிழ் மக்கள் படுதோல்வி பரிசாக அளித்தார்கள். இராஜாஜி ஏமாந்தார், காமராஜரும் ஏமாந்தார். இராஜாஜி, காமராஜரும் தோல்வி அடைந்த அந்த முயற்ச்சியில் எம்.ஜி.ஆர். முழுமையாக வெற்றி பேற்றார். அந்த அளவுக்கு தமிழ் மக்களிடையே எம்.ஜி.ஆருடைய செல்வாக்கு மேலோங்கி நிற்கிறது என்பதை இந்திரா காந்தி முதல் எல்லாருமே உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் தான் இந்தப் பார்லிமெண்டுத் தேர்தல் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. வோடு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ள உடன் பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரின் இந்தச் செல்வாக்கிலே ஒரு சிறு குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாட்டை நினைவு படுத்தும் வகையில் அவருடைய இரட்டை இலைத் தேர்த்தல் சின்னமே அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. ..........



............... இராஜாஜி நவீன சாணக்கியன் என்றால் தமிழ்நாட்டிலே உள்ள அறிவாளிகள் அத்தனை பேரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரையும் சாணக்கியன் என்றால் நம் வாசகர்கள் பலர் சிரிக்காமல் இருக்கமட்டார்கள். இது எனக்கும் தெரியும், அவர்கள் ஏன் சிரிக்க வேண்டும், எம்.ஜி.ஆர். ஒரு சினிமா நடிகர் அதனால் எல்லாரும் சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். எவ்வளவுதான் அரசியல் செல்வாக்கோடு விளங்கினாலும், அதை வெறும் சினிமா கவர்ச்சி என்று ஒதுக்கி தள்ளிவிடுகிறார்கள்.

இத்தகையே பேச்சுக்கு எம்.ஜி.ஆர் இனியும் இடம் கொடுக்கலாமா? அரசியலும், சினிமாவும் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைகளாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்றிலிருந்து விலகி, மற்றொன்றில் முழு மூச்சாக ஈடுபடுவது எம்.ஜி.ஆரின் எதிர்காலதிற்கு நல்லது.

திரைபடங்களில் எம்.ஜி.ஆர் ஒரு முடி சூடா மன்னராக வாழ்ந்து விட்டார்......... மேலும் அவருக்கு வயதாகி விட்டது. படம் மார்க்கெட் டல்லாகிக் கொண்டே போகிறது. 10 வருடங்களுக்கு முன்பே எம்.ஜி.ஆர். ஒரு வயதான நடிகர் என்று பெயர் வாங்கி விட்டார்.... முன்பு போல் அதிகமான பணம் சம்பாதிக்க முடியாது....... அரசியலில் எம்.ஜி.ஆருக்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன... அதற்கு முட்டுக் கட்டை அண்ணாயிசம். இது வரையில் அதை ஒரு மந்திரம் போல் உருப்போட்டுக் கொண்டிருந்தது சரிதாம், ஆனால் இனிமேல் இது எடுபடாது.

எதிர்காலத்தில் இந்தியாவிலே இரண்டு கட்சிதான் ஒன்று காங்கிரஸ் இரண்டு ஜானதா. .......... இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்.க்கு இரண்டு கட்சியிலும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. ஆகையால் எம்.ஜி.ஆர். தன்னுடைய கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் அல்லது ஜானதாவோடு இணைந்து விடுவது அவருக்கு மட்டுமல்ல நம் தமிழ் நாட்டுக்கே பேரிதும் நல்லது....

(அவர் குறிப்பிட்ட 2வது கட்சி இப்போது இல்லை, ஆனாலும் எம்.ஜி.ஆர். இல்லாமலும் கட்சி இருக்கிறது)

உபரியாக சில வாசகரின் கேள்விக்களுக்கு இப்படி பதில் தந்திருந்தார் - (1977)
1) இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?
எம்.ஜி.ஆர். கட்சியை பார்த்தால் 60 சீட் கூட கிடைக்காது.

2) எம்.ஜி.ஆர். இந்த முறை வெற்றி பெறுவாரா?
அவரை எதிர்த்து நடிகை லதா நின்றால், எம்.ஜி.ஆர் தோற்று விடுவார், அவருக்கு டிபாசிட் கூட கிடைக்காது.

Friday, January 19, 2007

எம்.ஜி.ஆரின் வயதான தோற்றம்


எல்லிஸ் ஆர் டங்கன் அவர்கள் இயக்கிய "மீரா" என்ற படத்தில் எம்.ஜி.ஆர் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு நமிடம் மட்டும் வரும் கதாபாத்திரம். எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆர். நடித்த வயோதிக கதாபாத்திரம் இதுவாக தான் இருக்கும். (வாலிப வயதில் நடித்த வயதான கதாபாத்திரம்!)

Monday, January 15, 2007

எம்.ஜி.ஆரின் அபூர்வ படம்





1967க்கு பின் எம்.ஜி.ஆர் தொப்பியும் கண்ணாடியும் அணிய ஆரம்பித்தார், கருப்பு கண்ணாடி மூலமாக தான் யாரை பார்க்கிறார் என்று தெரியாமல் இருக்கவும், மக்களை சந்திக்கும் போது தன் மேல் ஏறியப்படும் பூக்களோடு சிறிய கற்களும் சேர்த்து விழூம் போது அடி படாமல் தப்பித்து கொள்ளவும் பயன்படுத்தினார்.

ஆனால் எம்.ஜி.ஆர் தலையில் முடி இல்லாததால் தொப்பி அணிந்து கொண்டதாக சொன்னார்கள், அந்த செய்தி தவறு என்பதை நிருபிக்க செய்தியாளர்கள் முன்னிலையில் எடுத்த படம். எம்.ஜி.ஆருடன் இருப்பவர் தற்போது தி.நகர் எம்.ஜி.ஆர் இல்ல பாதுகாவலர் எம்.ஜி.ஆர் முத்து.

Saturday, January 13, 2007

பொங்கல் நல்வாழ்த்துகள்






அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்





"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஓழுங்காய் பாடுபடு வயற்காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்"

Wednesday, January 10, 2007

Saturday, January 6, 2007

Photos



எனக்கு பிடித்த சில எம்.ஜி.ஆர்.
புகைபடங்கள் (இதயக்கனி மாத இதழில்
எடுத்தது)
முதல் படம் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா
நடித்து வெளி வாராத படம்
இரண்டாவது படம் நினைத்ததை
முடிப்பவன்

Friday, January 5, 2007

Start

Dedicated to MGR Fans